குட்டி இளவரசனின் குட்டிப் பூ

குட்டி இளவரசனின் குட்டிப் பூ, உதயசங்கர், வானம் வெளியீடு, விலை 100ரூ. பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் எக்சுபெரி எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘குட்டி இளவரசன்’. அந்த நாவலில் இடம்பெறும் குட்டி இளவரசன், அவன் நேசிக்கும் குட்டிப்பூ ஆகியோருடன் அந்த்வான் எக்சுபெரியும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கதை இது. புகழ்பெற்ற இந்தக் கதாபாத்திரங்கள் இன்றைய பிரச்சினைகள் சிலவற்றின் ஊடாகச் சென்று திரும்பும் புது முயற்சியே இந்தக் கதை. இளையோர் நாவலாகச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 6/1/2022. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

பச்சை நிழல்

பச்சை நிழல், உதயசங்கர், என்.சி.பி.எச்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. தண்ணீரே இல்லாத ஒரு திடலில் ஒரு புல் முளைக்கிறது. அந்தப் புல்லை இரண்டு சிறுமிகள் கவனமாகப் பார்த்துக்கொள்வதே இந்த நூலின் தலைப்புக்கதை. இதேபோல் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/product.php?productid=32735&page=1 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முன்னொரு காலத்தில்

முன்னொரு காலத்தில், உதயசங்கர், நூல்வனம், விலை 90ரூ. கோவில்பட்டி மண்ணில்தான் எத்தனையெத்தனை படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். 1980-களில் தீவிர இலக்கிய தேடலோடு இயங்கிய 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சங்கமிக்கும் ஊராக கோவில்பட்டி விளங்கியது. எழுதுவதோடு மட்டுமே சுருங்கிவிடாமல், இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் என தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஒரு சூழல் அங்கே நிலவியிருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் தனது பின்னோக்கிய நினைவுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார். இதில், கோவில்பட்டி எனும் ஊரில் பெருமை மட்டுமல்ல, எழுத்தாளர்களின் நட்பு மற்றும் சமூகம் குறித்த அக்கறையுள்ள மனிதர்களின் துடிப்பும் அடங்கியிருக்கிறது. […]

Read more

மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி, உதயசங்கர், நூல்வனம், குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயாபஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

குழந்தைகளின் அற்புத உலகில்

குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ. குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய […]

Read more

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும், என்.எஸ்.கிருஷ்ணன் ஸ்வாமி, வரமங்கை பதிப்பகம், சென்னை 5, பக். 398, விலை 200ரூ. கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன்வைக்கின்ற நூல். பி.ஸ்ரீ.ஆச்சாரியாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. குறிப்பாக ஓர் கருஞாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி என்கிற திருவாய்மொழிப் பாடலும் கரு ஞாயிறு […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ. உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய […]

Read more