முன்னொரு காலத்தில்
முன்னொரு காலத்தில், உதயசங்கர், நூல்வனம், விலை 90ரூ.
கோவில்பட்டி மண்ணில்தான் எத்தனையெத்தனை படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். 1980-களில் தீவிர இலக்கிய தேடலோடு இயங்கிய 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சங்கமிக்கும் ஊராக கோவில்பட்டி விளங்கியது.
எழுதுவதோடு மட்டுமே சுருங்கிவிடாமல், இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் என தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஒரு சூழல் அங்கே நிலவியிருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் தனது பின்னோக்கிய நினைவுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார்.
இதில், கோவில்பட்டி எனும் ஊரில் பெருமை மட்டுமல்ல, எழுத்தாளர்களின் நட்பு மற்றும் சமூகம் குறித்த அக்கறையுள்ள மனிதர்களின் துடிப்பும் அடங்கியிருக்கிறது.
தொகுப்பு: மு.முருகேஷ்
நன்றி: தி இந்து, 14/10/2017.