கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு, மிகையீல் நைமி, தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை: ரூ.150. தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்… இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், […]

Read more

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும், வேணு சீனிவாசன், மங்கை பதிப்பகம், பக்.368. விலை ரூ.250. ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார். அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு […]

Read more

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்,  அப்துல்காதர், நேஷனல் பப்ளிஷர்ஸ்,நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை ரூ. 180. அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, கலைகள் போன்றவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரத்தில், இல்லறம், துறவறம், சமுதாய அறம், அரசியல் அறம் ஆகியவை எவ்வாறெல்லாம் இயல்பாகவே விரவிக் கிடக்கின்றன என்பதை புதிய நோக்குடன், பலவித கோணங்களில், விரிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல். அடையாளமற்ற அடையாளம், அறக்கோட்பாட்டு அமுதசுரபி, அகப்புற அற ஆவணம் உள்பட எட்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திருக்குறள், புறநானூறு உள்ளிட்டதமிழ் இலக்கியங்கள், பிற நாட்டு […]

Read more

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும், நாயனார், பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், பக்.912, விலை ரூ.1,100. பண்டைக் காலத்து இலக்கியங்களுக்கு பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள அரிய உரை நூல்களைப் பதிப்பாசிரியர் பதிப்பித்து வருகிறார். அவற்றுள் திருக்குறள் பதிப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் சரவணப் பெருமாளையர் உரையான இந்நூலும் சேர்கிறது. இவ்வுரை நூல் 1847, 1862, 1878, 1909,1928-ஆகிய ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. இத்திருக்குறள் தெளிபொருள் விளக்கம், பரிமேலழகர் உரையைத் தழுவி, திருவள்ளுவ மாலையுரையுடன் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் “பேராண்மை‘ எனக் குறிப்பிடுவதற்கான காரணத்தைக் கூறுமிடத்தில், “புறப்பகைகளை அடக்கும் […]

Read more

காந்தியும் பகத் சிங்கும்

காந்தியும் பகத் சிங்கும், வி.என்.தத்தா, தமிழில்: அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்துப் போராடிய லாலா லஜபதி ராய் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பழி வாங்கும்விதத்தில் பகத் சிங்கும் நண்பர்களும் சாண்டர்ûஸச் சுட்டுக் கொன்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக 1929 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 -ஆம் தேதி தில்லி மத்திய சட்டசபையில் பகத் சிங், தத் ஆகியோர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அதனையொட்டி […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள் , முத்தாலங்குறிச்சி காமராசு; காவ்யா,  பக்.1042, விலை ரூ.1000. தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் […]

Read more

முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், […]

Read more

முகத்தில் முகம் பார்க்கலாம்

முகத்தில் முகம் பார்க்கலாம், எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அதன் மூலமாக எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமகன். இந்தத் தொகுதியில் அர்த்தமும், ஆழமும் மிகுந்த பல கவிதைகளை காணலாம். ஆளை வைத்து ஆளை அடித்து முடிக்கலாம் – பின் தாளை வைத்து வழக்கை மூடி மறைக்கலாம் என மனம் நொந்து பேசுவது உட்பட பல நிதர்சனங்களைக் காணலாம்!’ நன்றி: தினமலர், 15/12/19 […]

Read more

அண்டை வீடு

அண்டை வீடு, பயண இலக்கியம், சுப்ரபாரதி மணியன், காவ்யா, விலை 110ரூ. பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார். பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் உடைப்பு’ இப்படியாக […]

Read more

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 120ரூ. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும். எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன. வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன விசேஷம், எப்போது […]

Read more
1 3 4 5 6 7 9