திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா வெளியீடு, பக். 223, விலை 230ரூ. தமிழ்ச் சமுதாயத்தில் பல நுாறு ஆண்டுகளாக, ஆழமாக வேரூன்றிப் புரையோடிப் போன மடமைகள், பழமைகள் ஆகியனவற்றை நகைப்புக்கு உள்ளாக்கிப் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவை திராவிட இயக்க படைப்பாளிகளின் படைப்புகளும், அவர்தம் இலக்கிய ஆய்வுகளுமாகும். திராவிட இயக்கப் படைப்பாளர்கள் தம் படைப்புகளில் சமூக நீதி, வகுப்பு வாரி உரிமை, மொழி மானம், இன மானம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு போன்ற கோட்பாடுகளை உள்வாங்கி ஜாதி, […]

Read more

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன், பக்.120, விலை ரூ.100. பெண்களின் பிரச்னைகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். தீர்வுகள் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் தன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது என்பதற்கு இந்நூலே ஓர் எடுத்துக்காட்டு. பெண்களை வீட்டில் யாரும் பாராட்டுவதில்லை. தேவையற்ற பழிச்சொற்களுக்குப் பெண்கள் ஆளாக நேரிடுகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுகிறார்கள். பெண்கள் தனியாக தொலைதூரங்களுக்கு ஆண்களைப் போல பயணம் செய்ய முடியாது. பெண்கள் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி,  கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், பக்.133, விலை ரூ.140. அலர்ஜி குறித்து எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் விடையளிக்கும் நூல். தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த வேதிப் பொருள்கள் போன்ற ஏராளமான காரணங்களால் காய்ச்சல், தலைவலிக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்பட வைப்பது அலர்ஜிதான். இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது, அதன் வகைகள், அதற்கான சரியான மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து தெளிவாக இந்நூல் விளக்குகிறது.நாகரிகம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்களை […]

Read more

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.444, விலை ரூ.360. காமராசருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக கூறியுள்ளார்.விருதுபட்டி என்ற சிற்றூரில் பிறந்த, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத காமராசர், இளம் வயதிலேயே தந்தை இழந்ததும், கடைகளில் வேலை செய்ததும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்ததும், பதவியைப் பெரிதாக நினைக்காததும், ஏழை மக்களின் நலன் என்ற அடிப்படையில் முடிவுகள் எடுத்ததும், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருந்தாலும் எளிய […]

Read more

காந்தி வந்தால் ஏந்தும் கருவி

காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி,  கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]

Read more

நானும் என் சூரியனும்

நானும் என் சூரியனும்,  சுப்ர.பாலன், வானதி பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]

Read more

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை, தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்,  கே.சுப்ரமணியன், வெளியீடு: ஏஐடியுசி, (சரோஜினி பதிப்பகம் மூலமாக), விலை: ரூ.80 கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் […]

Read more

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300 கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதரின் பேராசையால் சுரண்டப் பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியலாளர்கள் வரை புத்தர் அனைவரையும் இன்றும் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில்இருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும்கூட. பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் […]

Read more

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழாக்கம்: காளிப்ரஸாத், நற்றிணைப் பதிப்பகம்,  விலை: ரூ.260 ‘எழுதுவதற்கு முன் எதுவுமில்லை நானுமில்லை, எழுதிய பின் எல்லாம் இருந்தன. நானும் இருந்தேன்’ என்கிற முகப்புக் கவிதையிலே புத்தகத்தின் சுவாரஸ்யப் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. சின்னச் சின்னக் கவிதைகள் மனதின் மேடுபள்ளங்களில் ஏறியும் இறங்கியும் வாசிப்பவரை யோசிக்க வைக்கின்றன. யாருமற்ற கடற்கரை உரையாடல் பாணியிலான கவிதைகள், மனதின் நிகழ்த்துக்கலையாக வடிவம்கொள்கின்றன. ‘அந்தரத்தில்/ ஆயிரம் சைத்தான்கள்/ அரங்கத்தில்/ தெய்வப் புன்னகை’ என்கிற கவிதை ஒரு சந்நிதானத்து மெல்லொளியாய்ச் சுடர்விடுகிறது. ராஜா சந்திரசேகர் தன் கவிதைகளில் அக […]

Read more
1 7 8 9