குட்டிஇளவசரன்

குட்டிஇளவசரன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, (தமிழில்: ச. மதனகல்யாணி, வெ. ஸ்ரீராம்), க்ரியா வெளியீடு இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர், மனித உலகின் அழியாத அடிப்படை குணாம்சங்களையும் அன்பின் ஆற்றலையும் கவனப்படுத்தி எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல். நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று, தமிழில்: வல்லிக்கண்ணன், என்.பி.டி. இந்தத் தொகுப்பில் 13 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமியின் தமிழ்க் கதை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய திகில் கதை உள்ளிட்டவையும் உண்டு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818   ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட் (தமிழில்: எம். பி. […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. இயல், இசை, நாடகம் என மொழியையே மூன்றாகப் பகுத்து வளர்த்த பண்டைத் தமிழகத்தில், வளர்ச்சி பெற்றிருந்த கலைகள் ஏராளம். நமது கலை உன்னதங்கள் பலவற்றை இழந்துவிட்டோம், இப்போதும் இழந்துவருகிறோம். புகழ்பெற்ற தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்த நூல் நமது கலைச் செழுமையின் முக்கியத்துவம், பின்னணி பற்றி எடுத்துரைக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000017806.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிறுவர் நாடோடிக் கதைகள்

சிறுவர் நாடோடிக் கதைகள், கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம், கரிசல் பகுதி எழுத்துக்கு அடையாளம் தந்த மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என அழைக்கப்படும் கி.ரா., மக்களின் சொல்வழக்கில் இருந்த பல கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து எழுதிய சிறார் நாடோடிக் கதைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

பிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140 ‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் […]

Read more

இச்சா

இச்சா, ஷோபா சக்தி, கருப்புப் பிரதிகள், விலை 270ரூ. துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு […]

Read more

தித்திக்கும் விருந்து

தித்திக்கும் விருந்து, மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80 தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

பாதி நீதியும் நீதி ப{ா}தியும்

பாதி நீதியும் நீதி ப{ா}தியும், கே.சந்துரு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்துக்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுப்பாராயும் மேனாள் நீதிபதி சந்துருவின் கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு. இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கட்டுரைகள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானபோது வழக்கறிஞர்கள், சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை. இப்போது புத்தக வடிவம் பெறும் இக்கட்டுரைகள், விவாதிப்பதிலும் ஓர்ந்து கண்ணோடாத முறைமைக்கு ஒரு முன்னுதாரணம். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. […]

Read more

முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள்

முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள், வெ.முருகன், சி.சீதாராமன் அண்டு கோ, மொத்த விலை: ரூ.365. உரிமைகள் அறிவோம்… குற்றவியல் சட்டங்களைத் தீர்ப்பு விவரங்களுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட வழக்கறிஞர் வெ.முருகன், தொடர்ந்து முக்கியமான சட்டங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். முதிய குடிமக்களின் மற்றும் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) 2012, தமிழ்நாடு நிலக்கிழார்களின் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை மற்றும் பொறுப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2017 ஆகியவை வெ.முருகனின் தமிழாக்க வரிசையில் சமீபத்திய வரவுகள். இயற்றப்பட்ட சட்டத்துடன் […]

Read more
1 6 7 8 9