இச்சா

இச்சா, ஷோபா சக்தி, கருப்புப் பிரதிகள், விலை 270ரூ. துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு […]

Read more

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ. ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more

ராவ் சாகிப்

ராவ் சாகிப் எல்.சி. குருசாமி, ம.மதிவண்ணன், கருப்புப் பிரதிகள். அடித்தள மக்களுக்காக ஒலித்த குரல் காலனிய ஆட்சியில் சட்ட மேலவையில் குத்தூசி குருசாமி பேசிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய உரைகளில் தலித்துகளும் மட்டுமல்லாது பெண்களுக்கான கல்வி குறித்தும் உரத்துப் பேசுகிறார். பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து தன்னுடைய உரைகளில் வலியுறுத்துகிறார். அடித்தள மக்களின் குரலாகவும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான குரல் எழுப்புபவராகவும் விளங்கிய குத்தூசி குருசாமியின் உரைகளை கவிஞர் ம. மதிவண்ணன் தொகுத்தளித்திருக்கிறார். குருசாமியின் உரைகள் பெரியார் மற்றும் […]

Read more