ராவ் சாகிப்
ராவ் சாகிப் எல்.சி. குருசாமி, ம.மதிவண்ணன், கருப்புப் பிரதிகள்.
அடித்தள மக்களுக்காக ஒலித்த குரல் காலனிய ஆட்சியில் சட்ட மேலவையில் குத்தூசி குருசாமி பேசிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய உரைகளில் தலித்துகளும் மட்டுமல்லாது பெண்களுக்கான கல்வி குறித்தும் உரத்துப் பேசுகிறார். பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து தன்னுடைய உரைகளில் வலியுறுத்துகிறார். அடித்தள மக்களின் குரலாகவும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான குரல் எழுப்புபவராகவும் விளங்கிய குத்தூசி குருசாமியின் உரைகளை கவிஞர் ம. மதிவண்ணன் தொகுத்தளித்திருக்கிறார். குருசாமியின் உரைகள் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களுடன் சுயமரியாதை இயக்கத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கிறதென கருப்புப் பிரதிகள் பதிப்பகம் கூறுகிறது.
—-
என் வாழ்க்கை சரிதம், ஜான்சி ஜேக்கப், புலம்.
இயற்கையும் மனிதனும் ஒன்றுதான் இயற்கையை கண்போல நேசிக்கும் சூழலியலாளர் பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் தன் வரலாறு இந்நூல். இயற்கையை நேசிப்பது சக மனிதர்களையும் நேசிப்பது என்பதையும் உள்ளடக்கியதே என்பதை இந்நூல் உள்ளீடாகச் சொல்கிறது. சூழலியல் நூல்களில் முக்கியமான நூலாக வெளிவந்திருக்கும் இந்நூலை யூமாவாசுகி மலையாளத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். விதைகள் விதைத்திருக்கிறேன். அது விதைப்பவனின் வேலை. ஆகாயம் மழையும் வெயிலும் காற்றும் தரும். அவை விதைகளாக முளைத்து வரும் என இயற்கை மீது காதல் ஊட்டும் சூழலியலாளரின் கதை இது என்கிறது புலம் பதிப்பகம். நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.