சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ. ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ […]

Read more