ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, பி.ஆர். அம்பேத்கர், தலித் முரசு, விலை 120ரூ. இந்திய சமூகங்களில் புரையோடி கிடக்கும் சாதி எனும் கொடிய நோய்க்கு எதிராக போராடியவர்கள் பலர். அவர்களில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் முக்கியமானவர். நாடு விடுதலைக்கு முன் லாகூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றுக்காக சாதி ஒழிப்பு தொடர்பாக அவர் தயாரித்த உரையின் சாரம்சமே இந்த புத்தகம். சாதியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய தான் காட்டிய வழியிலோ அல்லது தங்கள் சொந்த வழிகளிலோ முயலுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் […]

Read more

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு, விலை 150ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் துன்பப்படுவதற்கு இந்து மதம்தான் காரணம்” என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். “நான் பிரம்மன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்” என்று கூறியவர். 1956-ம் ஆண்டில், 10 லட்சம் தலித் மக்களுடன், இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் மதம் மாறிய நிகழ்ச்சி உலகில் […]

Read more

ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ. பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ. அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more