நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு, விலை 150ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் துன்பப்படுவதற்கு இந்து மதம்தான் காரணம்” என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். “நான் பிரம்மன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்” என்று கூறியவர். 1956-ம் ஆண்டில், 10 லட்சம் தலித் மக்களுடன், இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் மதம் மாறிய நிகழ்ச்சி உலகில் […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more