ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, பி.ஆர். அம்பேத்கர், தலித் முரசு, விலை 120ரூ. இந்திய சமூகங்களில் புரையோடி கிடக்கும் சாதி எனும் கொடிய நோய்க்கு எதிராக போராடியவர்கள் பலர். அவர்களில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் முக்கியமானவர். நாடு விடுதலைக்கு முன் லாகூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றுக்காக சாதி ஒழிப்பு தொடர்பாக அவர் தயாரித்த உரையின் சாரம்சமே இந்த புத்தகம். சாதியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய தான் காட்டிய வழியிலோ அல்லது தங்கள் சொந்த வழிகளிலோ முயலுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ. அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more