ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ. பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் […]

Read more

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன், கருப்பு பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 80ரூ. வாழ்வின் தீராத் துயர், 35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே […]

Read more