இந்த நதி நனைவதற்கல்ல

இந்த நதி நனைவதற்கல்ல, தமயந்தி, பிரக்ஞை வெளியீடு, பக்.164, விலை ரூ. 130. ஒரு பெண், தன் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, சமூகப் பார்வையோடு ஆராய்வதே “இந்த நதி நனைவதற்கல்ல‘’. சட்டங்களாலும், நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்களின் மீதான வன்முறை குறித்து பேசும் நூலாசிரியர், தனது ஒவ்வொரு கட்டுரையிலும் தான் படித்த, சந்தித்த பெண்களின் பிரச்னைகளைத் தன் உக்கிரமான சொல்லாடலால் உணர வைக்கிறார். வாசகரின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார். மறக்கப்பட்ட வழக்குகள், சமூக அதிகாரக் கட்டமைப்புகள், குடும்பம் முதல் […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more