பார்வையை மாற்றுங்கள் பாராட்டுகள் நிச்சயம்

பார்வையை மாற்றுங்கள் பாராட்டுகள் நிச்சயம், ஜி.எஸ்.எஸ்., தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 140ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் தவறான அனுமானங்களை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நினைத்ததை சாதிக்க முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை நாம் உணராமல் போவது தான். இது தான் இந்த புத்தகத்தில் நுாலிழையாய் தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது. எதையும் மாத்தி யோசி என்பது தான் எழுத்தாளரின் கண்ணோட்டம். இப்படி ஆகிவிட்டதே என வருந்துவதை விட, எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என […]

Read more

ழ என்ற பாதையில் நடப்பவன்

ழ என்ற பாதையில் நடப்பவன், பெரு.விஷ்ணுகுமார், மணல்வீடு பதிப்பகம், விலை: ரூ.100   இல்லாத பாதையில் நடப்பவன்   ஒரு இளம் கவிஞரின் முதல் தொகுப்பு வெளியாகி, பரவலாகக் கவனம் பெற்று, குறுகிய காலகட்டத்துக்குள் மறுபதிப்பு காண்பதெல்லாம் நம் சமகாலச் சூழலில் அரிதாக நேரும் அற்புதம்தான். அப்படியான அதிசயம்தான் பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’. தோழியின் மல்லிகையை என்றும் வாடாமல் காக்கும் மனநிலையாகட்டும், புனையப்படும் கதைகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதர்களாகட்டும், பெருநகரத்துச் சிறுவன், விவஸ்தை கெட்ட நாணயங்கள், திறக்க முடியாத பூட்டைத் தொலைத்த சாவியாகட்டும்… இவையெல்லாம் வாழ்வின் […]

Read more

வழிகாட்டும் வாழ்வு

வழிகாட்டும் வாழ்வு, மாயில் திர்மிதீ, அரபுமூலம் – தமிழாக்கம் – அடிக்குறிப்பு, ரஹ்மத் பதிப்பகம், விலை: ரூ.300 தமிழில் ஹதீஸ் தொகுப்புகளின் மொழியாக்கங்களை வெளியிட்டுவரும் ரஹ்மத் பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு இது. இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்களின் ‘அஷ்ஷமாயிலுல் முஹம்மதியா’ ஹதீஸ் தொகுப்பின் தமிழாக்கமே ‘ஷமாயில் திர்மிதீ’. 56 பாடங்களாக 415 ஹதீஸ்கள் இத்தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இறைத்தூதர் நபிகளாரின் தோற்றத்தையும் அவரது பேரியல்புளையும் நன்னடத்தைகளையும் பற்றற்ற எளிய வாழ்வையும் குறித்து தெளிவாகப் பேசும் இத்தொகுப்பின் தமிழாக்கம் அரபு மூலத்துடனும் அடிக்குறிப்புகளுடனும் வெயிடப்பட்டுள்ளது. இப்ராஹீம் அல்பாஜூரீ அவர்களின் அரபி விரிவுரை உள்ளிட்ட […]

Read more

விழுவது எழுவதற்கே!

விழுவது எழுவதற்கே!, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல். தோல்விகளிலிருந்து மீண்டு நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய விதம் அனைவருக்குமான வாழ்க்கைப்பாடம். நன்றி: தமிழ் இந்து, 14/12/19. […]

Read more

கோளும் குறளும்

கோளும் குறளும், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 80ரூ. கையடக்க நுாலில், வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறள், ஜோதிடத்தை தெளிவாக சுட்டிக்காட்டுவதையும், மறுபிறப்பை உணர்த்துவதையும், முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட நுால். ஆசிரியர் ஜோதிட நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இப்புதிய பார்வை காணப்படுகிறது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029988.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

108 வைணவ திவ்ய தேசங்கள்

108 வைணவ திவ்ய தேசங்கள், பா.பெருமாள், சங்கர் பதிப்பகம், பக். 680, விலை 600ரூ. பக்தியில் ஆழ்ந்து, பரந்தாமனைப்பாடி பரவசம் அடைந்த ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், திவ்ய தேசங்கள் எனப்படும். வைணவ திவ்ய தேசங்கள் 108. பூத உடலோடு காணும் பேறு பெற்ற தலங்கள் 106. இந்த, 106 திவ்ய தேசங்களையும் வழிபட்ட பின், பெருமாளே வந்து மற்ற இரண்டு திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்வித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் என்பது தலையாய வைணவ கொள்கையாகும். 107 திருப்பாற்கடல்; 108 திருப்பரமபதம் ஆகும். […]

Read more

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, டாக்டர் ஓ.சோமசுந்தரம், ஆசிரியா வெளியீடு, விலை 350ரூ. அடுத்த ஆண்டு, 150வது பிறந்த நாளை கொண்டாடும் சிறப்பிற்குரிய மருத்துவமனையின் சேவைகளைச் சொல்கிறது இந்நுால். கிழக்கிந்திய கம்பெனியின் துவக்க கால தொடர்புகளை கூறும் இந்நுால் வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டதன்று; தாம் கண்டதையும், கேட்டதையும், உற்றதையும் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளையும் விளக்கும் இந்நுால், இன்றைய மாணவர்களுக்கு சிறந்த வரலாற்றுப் படிப்பினையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், பக். 312, விலை 260ரூ. பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை அறிவிக்கப்படவில்லை. பல்லவர்கள் கிரந்தம் எழுத்துகளை அறிமுகப்படுத்தினர்; பின், அவர்களே தமிழில் கல்வெட்டுகளை அமைத்தனர். வடமொழியை ஆதரித்த அவர்கள் தான், தமிழ் சிறக்கவும் உதவினர். தமிழகத்தில் கல்லாலும், மலையைக் குடைந்தும் கோவில்கள் கட்டி, கட்டடக் கலையை வளர்த்தனர். இந்நுால், பல்லவ மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள, வாசகர் இடையே ஆர்வத்தை துாண்டும். – சி.கலாதம்பி நன்றி: […]

Read more

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. ‘வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை […]

Read more

மனம் செய விரும்பு

மனம் செய விரும்பு, இசைக்கவி ரமணன், வானதி பதிப்பகம், பக். 80, விலை 70ரூ. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன். ‘மனம் செய்ய விரும்பு’ என்கிற இந்த நுாலின் தலைப்பே எனக்கு நேர்மறை எண்ணங்களை உண்டு பண்ணியது. ஒரு சிறிய நுாலில் ஒப்பற்ற கருத்துகளை கூறி மனதை பலப்படுத்தும் வித்தையை கற்றுத் தந்திருக்கிறார் ரமணன். மனம் விரும்பி ஒரு செயலை செய்யும் போது உறவுகள் பலப்படும். இன்றைய காலத்தில் மனம் புண்படியாக பேசுவது, வெறுப்புணர்வை வளர்ப்பது, தெய்வங்களையும், […]

Read more
1 4 5 6 7 8 9