விழுவது எழுவதற்கே!
விழுவது எழுவதற்கே!, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175
தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது.
7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல். தோல்விகளிலிருந்து மீண்டு நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய விதம் அனைவருக்குமான வாழ்க்கைப்பாடம்.
நன்றி: தமிழ் இந்து, 14/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818