108 வைணவ திவ்ய தேசங்கள்
108 வைணவ திவ்ய தேசங்கள், பா.பெருமாள், சங்கர் பதிப்பகம், பக். 680, விலை 600ரூ.
பக்தியில் ஆழ்ந்து, பரந்தாமனைப்பாடி பரவசம் அடைந்த ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், திவ்ய தேசங்கள் எனப்படும்.
வைணவ திவ்ய தேசங்கள் 108. பூத உடலோடு காணும் பேறு பெற்ற தலங்கள் 106. இந்த, 106 திவ்ய தேசங்களையும் வழிபட்ட பின், பெருமாளே வந்து மற்ற இரண்டு திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்வித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் என்பது தலையாய வைணவ கொள்கையாகும்.
107 திருப்பாற்கடல்; 108 திருப்பரமபதம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் கோவில் என்றால் ஸ்ரீரங்கம், திருமலை என்றால் திருப்பதி, பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரம்.
முக்தி தரும் நகரங்கள் ஏழினுள் காஞ்சிபுரம் ஒன்று, 12 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டது காஞ்சிபுரம்.
நுாலை படித்து முடித்தவுடன், 108 வைணவத் தலங்களுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
– பேராசிரியர் ரா.நாராயணன்.
நன்றி: தினமலர், 11/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818