முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு பதிப்பகம், விலை: ரூ.150.   தன்னைச் சுற்றியிருக்கும் உலகின் பலதரப்பட்ட மனிதர்களின் குணங்களிலிருந்தும், ஊடாடும் தொடர் காட்சிகளிலிருந்தும் தருணங்களைத் தனியாகத் தேடியெடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. நிகழ்வுகளின் வழியே நகர்ந்திடும் கதாபாத்திரங்களின் சகலவிதமான குணாதிசயங்களிலும் நுழைந்து அவர்களின் மன அடுக்குகளின் தன்மைகளை நுட்பமாகப் பதிவுசெய்திடும் புனைவின் வசீகரத்தை இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. கதைகள் நிகழ்ந்திடும் நிலத்தின் பின்னணியில் அரசியல், தத்துவம், பொருளாதாரம், மனப்பிறழ்வு ஆகியவை சார்ந்த உரையாடல்கள் வாசகர்களோடும் விவாதம் புரிகின்றன. தனிமனித அகம் […]

Read more

ழ என்ற பாதையில் நடப்பவன்

ழ என்ற பாதையில் நடப்பவன், பெரு.விஷ்ணுகுமார், மணல்வீடு பதிப்பகம், விலை: ரூ.100   இல்லாத பாதையில் நடப்பவன்   ஒரு இளம் கவிஞரின் முதல் தொகுப்பு வெளியாகி, பரவலாகக் கவனம் பெற்று, குறுகிய காலகட்டத்துக்குள் மறுபதிப்பு காண்பதெல்லாம் நம் சமகாலச் சூழலில் அரிதாக நேரும் அற்புதம்தான். அப்படியான அதிசயம்தான் பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’. தோழியின் மல்லிகையை என்றும் வாடாமல் காக்கும் மனநிலையாகட்டும், புனையப்படும் கதைகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதர்களாகட்டும், பெருநகரத்துச் சிறுவன், விவஸ்தை கெட்ட நாணயங்கள், திறக்க முடியாத பூட்டைத் தொலைத்த சாவியாகட்டும்… இவையெல்லாம் வாழ்வின் […]

Read more