நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா, விலை 100ரூ. ‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர். அப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், […]

Read more

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன், பக்.120, விலை ரூ.100. பெண்களின் பிரச்னைகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். தீர்வுகள் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் தன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது என்பதற்கு இந்நூலே ஓர் எடுத்துக்காட்டு. பெண்களை வீட்டில் யாரும் பாராட்டுவதில்லை. தேவையற்ற பழிச்சொற்களுக்குப் பெண்கள் ஆளாக நேரிடுகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுகிறார்கள். பெண்கள் தனியாக தொலைதூரங்களுக்கு ஆண்களைப் போல பயணம் செய்ய முடியாது. பெண்கள் […]

Read more

சிறகை விரி பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உலகின் சகல விஷயங்களையும் பார்க்கும் நூலாசிரியரின் 31 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நமது பாரம்பரிய சிந்தனைகள், முன்னோரின் வாழ்க்கைமுறைகளை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து தெளிவான புரிதல்களை இந்நூல் வழங்கியுள்ளது. அநீதியான எதையும் எதிர்க்கும் பண்பு நூல் முழுவதும் இழையோடி இருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய பல விஷயங்கள் ஓரிரு வரிகளிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ” கண், […]

Read more

சிறகை விரி, பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]

Read more

முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more