நானும் என் சூரியனும்
நானும் என் சூரியனும், சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.
புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன.
காலை நேரத்து செளந்தர்யங்கள் எங்கும்தான் கொட்டிக் கிடக்கின்றன. மாற்றறியாத செழும் பசும் பொன்னாய் மேகத்திரை விலகி நீ வரும் அழகைக் கண்டு மகிழ்கிறேன்…, எங்கள் தலைமுறையின் மகாகவி பாடிப் போனார்… காமுகனும் மாண்டான்… கடவுள் நெறிபேசும் மாமுனியும் மாண்டான்… மற்றிதிலே யார் பெரியோர்? என்று! அதுதானே யதார்த்தம்.
– இவ்வாறு செழுமையான வரிகள் தொய்வில்லாத வாசிப்புக்குத் துணை நிற்கின்றன. இந்த காலை நேரப் பதிவுகளை ஒரு காயத்ரி வழிபாடாகவும் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 2/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818