திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும், நாயனார், பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், பக்.912, விலை ரூ.1,100. பண்டைக் காலத்து இலக்கியங்களுக்கு பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள அரிய உரை நூல்களைப் பதிப்பாசிரியர் பதிப்பித்து வருகிறார். அவற்றுள் திருக்குறள் பதிப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் சரவணப் பெருமாளையர் உரையான இந்நூலும் சேர்கிறது. இவ்வுரை நூல் 1847, 1862, 1878, 1909,1928-ஆகிய ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. இத்திருக்குறள் தெளிபொருள் விளக்கம், பரிமேலழகர் உரையைத் தழுவி, திருவள்ளுவ மாலையுரையுடன் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் “பேராண்மை‘ எனக் குறிப்பிடுவதற்கான காரணத்தைக் கூறுமிடத்தில், “புறப்பகைகளை அடக்கும் […]

Read more