எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, சே ராஜேஸ்வரி வெளியீடு, சந்திரோதயம் பதிப்பகம்,விலை ரூ 200

புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும் நூல்களில் இந்தப் புத்தகம் சிறப்பான இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெண்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபரிதமான மதிப்பு பற்றிய பல செய்திகள் இந்த நூலில் காணப்படுகின்றன.

பெண்களுடன் பேசுவதற்கு எம்ஜிஆர் எந்த அளவு கூச்சப் படுவார் என்பது பல சம்பவ சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் எம்ஜிஆர் நடித்த படங்களில் அண்ணன் தங்கை பாசம் எந்த அளவில் காட்டப்பட்டிருக்கும், பெண் எதிரிகளை எம்.ஜி.ஆர். எவ்வாறு எதிர் கொள்வார், பெண்களை கவர்ந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்கள் நடிகைகளுக்கு எம்.ஜி.ஆர். எவ்வாறு பாதுகாவலராக இருந்தார் என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருப்பதால் இந்த நூல் எம்.ஜி.ஆர். ரசிகர்களை நிச்சயம் கவரும்.

நன்றி: தினத்தந்தி

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *