சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்
சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150.
ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன.
இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு தோன்றியது, இந்த இயக்கம் வளர்ந்து எப்படி என்பது போன்ற வரலாற்று தகவல்களும் இதில் இருக்கின்றன. நிலவில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் சாரணர் விருது பெற்றவர் என்பதோடு உலகம் முழுவதும் விண்வெளி வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட 214 பேரில் 125 பேர் சாரணியர்கள் என்ற வியப்பான செய்தியையும் இந்த நூல் தருகிறது.
நன்றி: தினத்தந்தி, 27/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818