ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள் – விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள், ராஜ்மோகன் காந்தி, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை ரூ.180. மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோரின் சிந்தனைகளின், நடவடிக்கைகளின் விளைவாக அந்நாளில் நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை – வேறு மாதிரியாக உருவாக்கியிருக்க முடியுமா? என்பதை ஆராயும் நூல். குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி சச்சிதானந்த், காந்தி மற்றும் நேருவைப் பற்றி வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெர்ரி […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள், ராஜ்மோகன் காந்தி, தமிழில் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 180ரூ. மகாத்மா காந்தியின் மகள் வழிப்பேரனான ராஜ்மோகன் காந்தி இந்த நூலை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் பற்றி குஜராத் சுவாமி சச்சிதானந்த், அமெரிக்கப் பேராசிரியர் பெர்ரி ஆண்டர்சன் ஆகியோர் வெளியிட்ட எதிர்மறையான கருத்தக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்டுரையாக எழுதத் தொடங்கி பின்னர் விரிவடைந்த இந்தப் புத்தகத்தில், இந்தியக் குடியரசின் தொடக்க கால வரலாறு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட […]

Read more

இந்திய சீனப் போர்

இந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம்,  பக்.416, விலை ரூ.350. 1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர். போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் […]

Read more