தேசத் தந்தைகள்
தேசத் தந்தைகள், ராஜ்மோகன் காந்தி, தமிழில் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 180ரூ.
மகாத்மா காந்தியின் மகள் வழிப்பேரனான ராஜ்மோகன் காந்தி இந்த நூலை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் பற்றி குஜராத் சுவாமி சச்சிதானந்த், அமெரிக்கப் பேராசிரியர் பெர்ரி ஆண்டர்சன் ஆகியோர் வெளியிட்ட எதிர்மறையான கருத்தக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்டுரையாக எழுதத் தொடங்கி பின்னர் விரிவடைந்த இந்தப் புத்தகத்தில், இந்தியக் குடியரசின் தொடக்க கால வரலாறு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட பிரிவினை, ஜின்னாவின் சர்ச்சைக்குரிய அரசியல், காந்தி அம்பேத்கர் இடையே இருந்த முரண், காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா என்பது போன்ற அரிய தகவல்கள் இந்த நூலில் நிறைந்து கிடக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 18/12/10
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350163.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818