ஒரு கதை ஒரு விதை
ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.
—-
வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ.
உலகிற்கு நல்லறம் புகட்டிய நாலடியாரின் 500 பாடல்களில் 36 பாடல்களுக்கு நிகழ்காலச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை சிறுகதை வடிவமாக்கி இருக்கிறார் நூலாசிரியர் வசந்தா அம்பலவாணன். நன்றி: தினத்தந்தி, 13/5/2015