அதே வினாடி

அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லா பிரச்சினைகளையும் சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். […]

Read more

அறிவார்ந்த ஆன்மீகம்

அறிவார்ந்த ஆன்மீகம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, பக். 240, விலை 200ரூ. ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மிகச் செயல்களின் பின்னணியிலிருக்கும் காரணங்களை அலசும் ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் பின்பற்றும் ஆன்மிகச் செயல்களின் காரணங்களை, விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்த ஆதாரங்களுடன் அழகுற விளக்குகிறார் நூலாசிரியர். தேங்காய் உடைப்பது ஏன்?, அணுவில் ஆண்டவன் போன்ற கட்டுரைகள் புதிய சிந்தனைகளைத் தூண்ட வல்லன. இந்த மண்ணில் உதித்த ஞானிகள், அவர்களது உபதேசங்கள், புனித நூல்கள் மூலமாகவும், […]

Read more

பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ. அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ. விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே […]

Read more

சங்கீத மும்மூர்த்திகள்

சங்கீத மும்மூர்த்திகள், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கர்நாடக இசைக்கு அருந்தொண்டாற்றிய இந்த மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் சுவைபட எழுதியுள்ளார் என். கணேசன். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.   —-   வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள், சிவ. நாகேந்திர பாபு, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, […]

Read more

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.   —-   கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. 29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் […]

Read more

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 1, விலை 140ரூ. இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே முள்ளிவாய்ககாலில் தொடங்கும் விடுதலை அரசியல். இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா. செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது. இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பதிப்பகம், ஏ82, அண்ணாநகர், சென்னை – 102. விலை ரூ. 70 தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் செட்டியார்கள், 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு படைத்தவர்கள். இங்குள்ள வீடுகள் அரண்மனை போன்று பிரமாண்டமானவை. அந்த “அரண்மனை”யின் பூட்டு, ஒரு அடிக்கு ஒரு அடி கொண்ட சதுரமானது! பூட்டு இவ்வளவு பெரிது என்றால் சாவி – ஒரு அடி நீளம் கொண்டது! எடை ஒரு கிலோ! எழுத்தாளரும், தொழில் அதிபருமான ‘அமுதா’ பாலகிருஷ்ணன் செட்டிநாட்டில் […]

Read more