அதே வினாடி
அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ.
முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நாகூர் ரூமி. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.
—-
நீ நான் தாமிரபரணி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், விலை 280ரூ.
புகழ் பெற்ற ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் திடீரென்று காணாமல் போகிறார். அவரைப் பற்றி துப்பறிய முயல்பவர்கள் அச்சுறுப்படுகிறார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓர் இளைஞர் ஈடுபடுகிறார். அவர் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை. இதில் காதல், பாசம், குடும்பம் ஆகியவற்றோடு மர்மங்களும் நிறைந்து இருப்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.