நாட்டை உருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின்
நாட்டை உ ருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின், தமிழில் நா. தர்மராஜன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ.
பிரெஞ்சு அடிமைத்தளத்தின் நெருப்பு ஜுவாலை வியட்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின். சிறைக்குள் தள்ளப்பட்போதிலும்,“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை. நான் ஓர் அங்குலம்கூடப் பின்வாங்கமாட்டேன்…” என்று உறுதியுடன் சூளுரைத்தார். வியட்நாம் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டவர். தம் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இத்தகைய சாதனையை புரிய முடிந்தது என்ற கேள்விக்கு, இந்நூல் தெளிவாகவும், விளக்கமாகவும் விடையளிக்கிறது. எளிய தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நா. தர்மராஜன். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.