காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்
காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ.
காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.
—-
ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.
58 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘ஹைக்கூ பூக்களாக’ ஒரே குடையின் நிழலில் மணம் பரப்பவிட்டுள்ளார். வாரிக் கொடுத்த வள்ளல் கண்ணை மூடி தியானம் வறண்ட பூமி. ஓர் உதாரணப்பூ. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.