காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. 58 கவிஞர்களின் ஹைக்கூ […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more