விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ.

விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 15/12/2014.    

—-

டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய வாழ்க்கை வரலாறுகள், முல்லைப் பதிப்பகம், சென்னை.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்கள் பிரபலமானவை. அவற்றை முல்லை பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. பண்டித ஜவகர்லால் நேரு-மறைந்த பிரதமர் நேருவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். விலை 35ரூ. முசோலினி-இத்தாலி சர்வாதிகாரியாக விளங்கிய முசோலியினியின் வாழ்க்கை வரலாறு பல திருப்பங்கள் நிறைந்தது. விலை 55ரூ. துருக்கியின் தந்தை முஸ்தபா கமால். இந்த நூலில்ன விலை 50ரூ. சத்ரபதி சிவாஜி நூல் விலை 35ரூ. நன்றி: தினத்தந்தி, 17/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *