மனித நோய்கள்
மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ.
மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் மகளாவார். எனவே தெளிந்த அழகிய நடையில் இந்நூல் எழுதப்பட்டிருப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 17/12/2014.
—-
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
முறைப்படி சட்டம் படிக்காதவர்கள்கூட தன் வழக்கை தானே கோர்ட்டில் நடத்தி வெற்றி பெறலாம் என்பதை சட்டபூர்வமாக விளக்கும் நூல். ஒரு வழக்கை தாக்கல் செய்ய கட்டனம் இரண்டு ரூபாய்தான் என்பது தொடங்கி, காவல்துறையில் புகார் செய்வது எப்படி? காவல் துறையில் உரிமையியல் வழக்குகளை விசாரிக்கலாமா? குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகள், அபிடவிட் என்றால் என்ன? வாய்தா என்றால் என்ன? வழக்கில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் எளிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். இன்றைய சமூக சூழலில், அனைவரும படித்து அறிந்து கொள்ள வேண்டிய அரிய சட்ட விஷயங்கள் நிறைந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.