கிருஷ்ணதேவராயர்
கிருஷ்ணதேவராயர், ஆ.சி. சம்பத், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-183-2.html விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். அவர் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எழுந்த பல சவால்களை எளிதாகச் சமாளித்தார். விஜயநகரத்தின் மீது தொடர்ந்து படையெடுத்த தக்காணத்து சுல்தான்களை வீரம் மற்றும் விவேகத்தால் வென்றெடுத்தார். அவரது பதவி ஏற்பு, ஆட்சிமுறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுத்தாளர் ஆ.சி.சம்பத் விளக்கியுள்ளார். ஒரு நாவலைப் படிப்பது போன்ற விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 17/12/2014.
—-
வள்ளலார் வழியில் வாழ்க வளமுடன், எஸ். மனோன்மணி, ஜெய்ஸ்ரீ அன்விகா புத்தக வெளியீட்டாளர்கள், திருவள்ளூர், விலை 150ரூ.
அருட்சோதி இராமலிங்க அடிகளாரையும், வேதாத்திரி மகரிஷியையும் ஒருங்கி தரிசிக்க எண்ணும் பக்தர்களுக்கு ஆன்மிக விருந்து அளிக்கிறது இந்நூல். வள்ளல் பெருமானின் ஆன்மிகப் பணிகளை அறிவிய்ல சிந்தனையோடு உலகின் பல திசைகளுக்கும் கொண்டு சென்ற மகரிஷியின் வார்த்தைகளும், உதாரணங்களும் இந்த நூலில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. தேடல் மனிதனை உயர்த்துகிறது. நல்ல விஷயங்களைத் தேடி வாசகர்களுக்கு வள்ளலாரின் கோட்பாடுகளையும், மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் நெறிகளையும், ஆன்மிக சிந்தனைகளையும் மக்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் திருவள்ளூர் எம்.என்.செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.