கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக். 32, விலை 15ரூ நாம் எந்தப் பொருளை எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழமாகச் சிந்தித்து தயார் செய்ய வேண்டும். வாக்கியங்கள் கருத்தால் பிணைந்து செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன், டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக்.80, விலை 35ரூ. ஆப்ரகாம் லிங்கன் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தது முதல் அவர் அரசியலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருமுறை பதவி வகித்தது வரை சுருக்கமாக பேசும் நூல். அவரது குணநலம், பண்பாடு, சொற்பொழிவுகள், அவரது படைப்புகள் ஆகியவற்றை மாணவர் உலகம் பயனுறும் வகையில் சிறுநூலாகத் தந்துள்ளார் மூதறிஞர் இராசமாணிக்கனார். நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு,டாக்டர் மா. இராசமாணிக்கனார்,  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010375.html தமிழகத்தை ஆண்ட மன்னர்களில், பல்லவ மன்னர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய பண்டைக்குலம், இன்னதென்று உறுதியாகக் கூறுவார் எவருமிலர். அவர்களது ஆட்சிக்காலத்தில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பல்லவ மன்னர்களின் இறைப்பணி அனைவராலும் இன்றளவும் பாராட்டப்படுகிறது. இறைப்பணி என்றாலே […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. முருகப் பெருமானின், தொண்டர்களை பற்றி விவரிக்கும் நூல். அகத்தியர், நக்கீரர் துவங்கி, திருமுருக கிருபானந்த வாரியர் வரை, 37 முருக தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பரவசத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. சக்தி விகடன் இதழில் இந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்த போதே, ஆன்மிக அன்பர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. இறைவனை தன் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கும், அவரது தொண்டர்களின் […]

Read more