தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ்நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சங்கங்கள் எக்காலத்தில் இருந்தன? அதில் இடம் பெற்றிருந்த புலவர்கள் யார்? அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? என்று ஆராய்ந்து, தான் கண்டறிந்த உண்மைகளை இந்த நூலில் எழுதியுள்ளார் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். அத்துடன் தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியும் ராசமாணிக்கனார் புதுத்தகவல்களை விவரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின், புதிய வடிவமைப்பிலும் சிறந்த கட்டமைப்பிலும் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. முருகப் பெருமானின், தொண்டர்களை பற்றி விவரிக்கும் நூல். அகத்தியர், நக்கீரர் துவங்கி, திருமுருக கிருபானந்த வாரியர் வரை, 37 முருக தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பரவசத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. சக்தி விகடன் இதழில் இந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்த போதே, ஆன்மிக அன்பர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. இறைவனை தன் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கும், அவரது தொண்டர்களின் […]

Read more