பல்லவர் வரலாறு
பல்லவர் வரலாறு,டாக்டர் மா. இராசமாணிக்கனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010375.html தமிழகத்தை ஆண்ட மன்னர்களில், பல்லவ மன்னர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய பண்டைக்குலம், இன்னதென்று உறுதியாகக் கூறுவார் எவருமிலர். அவர்களது ஆட்சிக்காலத்தில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பல்லவ மன்னர்களின் இறைப்பணி அனைவராலும் இன்றளவும் பாராட்டப்படுகிறது. இறைப்பணி என்றாலே கோயில்களின் உருவாக்கம்தானே. பல்லவ மன்னர்கள் குடைக் கோயில்களின் உருவாக்கத்துக்கு மூல புருசர்களாக விளங்கினர். அதுபோன்றே கல்வெட்டுச் சாசனங்களுக்கும் முன்னுரிமை அளித்தனர். இப்படிப்பட்ட பல்லவர்களின் வரலாறு, ஆட்சி நிர்வாகம், அவர்களது மக்கள் சேவை, சமயத்தொண்டு ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் மா. இராசமாணிக்கனார் எழுதிய நூல், நீண்ட இடைவெளிக்குப்பின் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/8/2015.