திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)
திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில உரை இடம் பெற்று இருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
இலக்கியப் பூக்கள், காந்தகளம், சென்னை, விலை முதல் புத்தகம் 200ரூ, இரண்டாவது புத்தகம் 990ரூ.
இலங்கையில் தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் கிடைத்த பெயரும், புகழும் அவர்களுக்கு கிட்டவில்லை. அக்குறையைப் போக்கும் வண்ணம், இலங்கை பேனா மன்னர்கள் பற்றி, இலக்கியப் பூக்கள் என்ற பெயரில் 2 புத்தகங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார் முல்லை அமுதன். முதல் புத்தகத்தில் 44 எழுத்தாளர்கள் பற்றியும், இரண்டாவது புத்தகத்தில் 56 எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/8/2015.