சப்பெ கொகாலு

சப்பெ கொகாலு, ஒடியன் லட்சுமணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  விலை 225ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022871.html திருமணத்திற்கு முன் 3 நாள் வன வாழ்க்கை பழங்குடி மக்களின் வாழ்வை சித்தரிக்கும், ‘சப்பெ கொகாலு’ என்றால், இருளர் பயன்படுத்தும் துளை இசை கருவியின் பெயர். இந்த தொகுப்பில், பழங்குடிகளான இருளர்களின் வாழ்வியலை ஆசிரியர் விவரிக்கிறார். இருளர் என்ற சொல்லுக்கு கறுப்பர் என பொருள். இவர்களில் பல்வேறு குலங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, திருமணம், பிரசவம், உணவு முறை, மருத்துவம் என, அவர்களது அனைத்து வாழ்க்கை முறையையும், கவிதையாக தொகுக்கப்பட்டு உள்ளன. ஊர் மூப்பன், இருளர் பகுதியின் தலைவர். ஊரில் நடக்கும் எல்லா பஞ்சாயத்துக்கும் இவர்தான் தீர்ப்பு அளிக்கிறார். கல்யாணம், இறப்பு, உள்ளிட்ட காரியங்களை செய்யும் பொறுப்பும் இவருக்கே. வண்டாரி என்பவர், மூப்பனின் உதவியாளர். மக்களுக்கான செய்திகளை கொண்டு செல்பவர் இவர்தான். இருளரின் திருணம் பெரும்பாலும் காதல் திருமணங்களே. ஒருவரை, ஒருவர் விரும்பும் ஆண், பெண்ணை மூன்று நாள் காட்டுக்கு அனுப்பிவிடுவர். அதன்பின் தம்பதிகளாக ஊருக்குள் வாழ்கின்றனர். ஒரு குலத்தை சேர்ந்தோர், குறிப்பிட்ட சில குலத்துடன்தான், திருமண பந்தம் செய்கின்றனர். பந்தம் இல்லாத குலத்துடன் உறவு கொள்வோரை, ஊரை விட்டு விலக்கி வைக்கின்றனர். எளிதாக எவரையும் நம்புவதில்லை. அன்னியர்களிடம் எந்த தகவலையும் பகிர முன் வருவதில்லை. இதற்கு, பாதுகாப்பற்ற அவர்களின் வாழ்வே காரணம் என்கிறார் ஆசிரியர். பழங்குடி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக்கி, கனிம வளங்களை, வெளிநாட்டு முதலாளிகளுக்கு அரசுகள் தாரை வார்த்துக்கொடுக்கும் இந்த சூழலில், பழங்குடிகளின் வாழ்வியலை மிக அற்புதமாக சொல்லுகிறது ‘சப்பெ கொகாலு’. இருளர்களின் மொழியிலேயே கவிதைகள் பெரும்பாலும் அமைந்துள்ளது வரவேற்புக்கு உரியது. -கனிமொழி, கவிஞர். நன்றி: தினமலர், 6/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *