இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ.
விவசாயமும் விவசாயிகளும் உயிர்த்துடிப்புப் பெற ஒரே வழி நாம் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல். தவறான விவசாய முறைகளால் குடிக்கும் நீரிலிருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் எனத் தொடங்கி தாய்ப்பாலே நஞ்சாகிவிட்ட நிலையை உதாரணங்களுடன் விளக்கி, இதிலிருந்து மீள, நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை வளத்தை, நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்கிறார்கள். மண் வளத்தைத் திரும்பப் பெற வேண்டும். அதற்கு இயற்கை வேளாண்மை முறை ஒன்றே வழி என்பதை பல்வேறு நிலையில் விளக்குவது சிறப்பு. இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கும் செய்ய முயல்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எல்லா வகையிலும் உதவும் நூல். நன்றி: குமுதம், 4/1/2016.