என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே
என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ.
படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.
—-
கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ.
29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் உள்ளன. வித்தியாசமாக சமையல் செய்ய விரும்புவோர் செய்து பார்க்கலாம்.
—-
போட்டித் தேர்வுக்கான பொதுக்கட்டுரைகள், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை போட்டித்தேர்வுக்கான பொதுக் கட்டுரைகள் ரூ.90, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி ரூ.20. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-0.html
நாட்டின் உயர்ந்த பதவிகளில் உட்கார வாயிலாக இருப்பவை, போட்டித் தேர்வுகள், அதற்கு இளைஞர்களுக்கு வழிகாட்டும் பல நூல்களை, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் நெல்லை கவிநேசன் (எஸ். நாராயணராஜன்) எழுதியிருக்கிறார். அந்த வரிசையில் இவர் கோகுலம் கதிர் இதழில் எழுதிய, போட்டித் தேர்வுக்கான பொதுக் கட்டுரைகள் தொடர் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. அதேபோல போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி நூலை உருவாக்கியிருக்கிறார். பயனுள்ள தகவல்களை, அழகான அச்சமைப்பு, வடிவமைப்பில் தந்திருக்கிறார்கள். போட்டித் தேர்வில் வெல்ல முனைப்புக் கொண்டுள்ள இளைஞர்கள் தவறவிடக் கூடாத நூல்கள் இவை. நன்றி: தினதந்தி, 2/10/2013.