சங்கீத மும்மூர்த்திகள்
சங்கீத மும்மூர்த்திகள், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ.
தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கர்நாடக இசைக்கு அருந்தொண்டாற்றிய இந்த மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் சுவைபட எழுதியுள்ளார் என். கணேசன். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.
—-
வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள், சிவ. நாகேந்திர பாபு, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-881-0.html
திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் மூடிய, 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனதில் பதிந்தது. பலரும் புத்தமதத்தை தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்து பயன்பெறலாமே.
—-
எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன், டென்சிங், ஆர்.சி. சம்பத், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 96, விலை ரூ. 50. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-881-5.html
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எழுதப்படிக்கத் தெரியாதவர்கூட, கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால், உலகப் புகழ் பெறமுடியும் என்பதை நிரூபித்த ஒரு வெற்றியாளரின் சரித்திரம். நேபாளத்தில் பிறந்து, இந்தியாவில் மேற்கு வங்கத்திலே வளர்ந்த, நேபாள இளைஞன் டென்சிங் எழுத்தறிவற்றவன். மலைஏறும் பயிற்சியும் மன உறுதியும் கொண்டு, அந்த எவரெஸ்டை நோக்கி ஏறி, அதன் உச்சியில் கம்பீரமாக நின்றான். தடை பல கடந்து தனிச்சரித்திரம் படைத்த டென்சிங்கின் வீரவரலாறு. -எஸ். குரு. நன்றி:தினமலர், 8/4/2012,