ஸ்ரீ சங்கர தரிசனம் 2012
ஸ்ரீ சங்கர தரிசனம் 2012, பாரதி காவலர் கே. ராமமூர்த்தி.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 62வது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட ஆன்மிக சிறப்பிதழ். சிருங்கேரி மடத்தின் சிறப்புகள் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 22/9/2013.
—-
யோகா உங்கள் கையில், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 61, டி.பி.கே.ரோடு, மதுரை, விலை 150ரூ.‘
உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிரிப்பு மட்டுமல்ல. யோகாவும்தான். இதை எப்படி முறையாக செய்வது என்பது குறித்து, 142 யோகாசனங்கள் மூலம் சிறந்த மருத்துவ எழுத்தாளரான டாக்டர் ஜெயவெங்கடேஷ் விளக்குகிறார். நடுத்தர வயதினர் 6 மணிநேரமும், மற்றவர் 8 மணி நேரமும் இரவில் ஆசனம் செய்வது நல்லது. அனைவரும் செய்யக்கூடிய எளிய சாதாரண ஆசனங்கள் இந்நூலில் இருக்கிறது. தாம்பத்தியத்திற்கு உதவும் ஆசனங்கள், முதுகுவலி, முட்டிவலி போக்கும் கடியாசனம், இடுப்பு வலியை குறைக்க என ஒவ்வொரு ஆசனம். அதை எப்படி செய்வது என்ற விளக்கம் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினமலர், 1/4/2012.