குட்டி ஆகாயம்

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்), நிழல்,காந்தி, வானம் அமைப்பு, விலை 40ரூ. குழந்தைகள் உருவாக்கிய புத்தகம். இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே. ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி, இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல், விலை 120ரூ. உலகத்தின் சினிமா ரசிகர்களுக்கு கிம் கி டுக் இப்பொழுது நெருக்கமான பெயர். குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு அவரே ஆகச் சிறந்த இயக்குநர். அவரைப் பற்றிய முழுதான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தவிர்க்க முடியாத அவரின் அரிதான நீண்ட நேர்காணல் காணக்கிடைக்கிறது. திரைப்படத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிற எல்லோருக்கும் இது கையில் இருக்க வேண்டிய புத்தகம். அவரது சினிமா வழக்கமான சினிமாக்களின் பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிற்கிறது. அவரது கதையுலகம் ஒரு […]

Read more

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ. விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே […]

Read more

கமலின் கலைப்படங்கள்

கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-4.html அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்பாமல் ஒப்புக் கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது. கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹேராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பேசிவம், குருதிப்பஉல், குணா ஆகிய படங்களை பார்ட் […]

Read more