பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை
பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65. அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. […]
Read more