இராகவதம் 1
இராகவதம் 1, ரா. இராகவையங்கார் ஆக்கங்கள், தொகுப்பும் பதிப்பும்- கா. அய்யப்பன், காவ்யா, சென்னை, பக். 1040, விலை 1000ரூ.
மதுரைத் தமிழ்ச்சங்க சமஸ்தான வித்துவானாக இருந்தவர் ரா.இரா. தமிழ் ஆய்வு வரலாற்றில் தமக்கென ஒரு தனி இடத்தைப் படித்தவர். செந்தமிழ்ப் பத்திரிகையின் முதல் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது, அவ்விதழில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செந்தமிழ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இதில் செந்தமிழ் இதழிலும், கலைமகள் மற்றும் விழா மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் தனி நூல்களும், இலக்கணம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியம், சிற்றிலக்கியம், வரலாறு, பண்பாடு, முகவுரைகள் என்று பகுக்கப்பட்டுள்ளன. தனி நூல்களில் நல்லிசைப் புலமை மெல்லியலாளர்கள், வஞ்சி மாநகர், சேதுநாடும் தமிழும், கோசர், தித்தன், கம்பர், தமிழ்வரலாறு ஆகிய ஏழு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் ரா.இரா. பயன்படுத்திய குறியீடுகள் அப்படியே பயன்படுத்தப்படவில்லை. அதாவது கணித எண்களைத் தமிழ் எண் முறையில் எழுதம் வழக்கம் பின்பற்றப்படாமல், அதனை கணித எண் இட்டே ஆளப்பட்டுள்ளது. பக்கக் குறிப்புகளும் உள்ளன. அதனை அடைப்புக் குறியிட்டு அந்தந்த இடத்திலேயே தரப்பட்டுள்ளது சிறப்பு. கிரந்த எழுத்தில் அமைந்த பகுதிகள் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. முடிந்தவரை அவரது உண்மை நடையை மாற்றாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். அரிய இத்தொகுதியை இரண்டு பாகமாக வெளியிட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எடுத்துப் பிரித்துப் படிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் நூல் உள்ளதுதான் சற்று சிரமத்தை ஏற்படுத்துகிறது. நன்றி: தினமணி, 2/6/2014.
—-
மினியேச்சர் மகாபாரதம், டி.வி. ராதாகிருஷ்ணன், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
காவிய மாந்தர்களின் மகத்தான இதிகாசம் முதல்முறையாக இப்போது எளிய நடையில் இனிய தமிழில் வெளிவந்துள்ளது. நன்றி: தினகரன், 25/5/2014.