தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடி தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ.
தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் பின்புலம். அரசியல், சமூக, பொருளாதாரம், ஆன்மிகம் உள்ளிட்ட பல சிந்தனைகள். கேள்விகளுக்கான விடையாக இந்நூல் அமைந்துள்ளது. பெரிய கோயில் கோபுரத்தின் விமான நிழல் தரையில் விழாதா? விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதா? கருவூர்த் தேவர் இராசராசசோழனின் அரசகுருவா? உள்ளிட்ட பல நூறு வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் உரிய சரியான விடையை நூலாசிரியர் வழங்கி, தஞ்சை பெரிய கோயில் வற்றாத வரலாற்றுப் புதையல் என்பதை நிரூபித்துள்ளார். நன்றி: குமுதம், 30/4/2014.
—-
சொல்றேண்ணே சொல்றேன், இமான் அண்ணாச்சி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
குட்டிச் சுட்டீஸ்களை சிரிக்கச் செய்யும், பெரியவர்களையும் ரசிக்கச் செய்யும் அண்ணாச்சியின் கலகல வாழ்க்கை. நன்றி: தினகரன், 25/5/2014.