யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் […]

Read more

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்களை விரட்டி அடித்து, இந்தியாவை மீட்க கட்டபொம்மன் போன்ற மன்னர்கள் வீரப்போர் புரிந்தனர். பின்னர் மகாத்மா காந்தி தலைமை ஏற்று, சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தினர். சுதந்திரப்போர் பற்றிய அனைத்து விவரங்களையும் எளிய இனிய நடையில் கதைபோல் கூறுகிறார் மு.அப்பாஸ் மந்திரி. ஏராளமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவ மாணவிகள் அவசியம் […]

Read more

கல்குதிரை

கல்குதிரை, இளவேனிற்கால இதழ், எழுத்தாளர் கோணங்கி,  கோவில்பட்டி 628502. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெகுஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதாரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது. […]

Read more