அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ.

நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று அசைப்பட்ட பொதுவுடைமைவாதி. கண்மூடிப்பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகக் கலகக் குரல் எழுப்பிய புரட்சிக்காரர். ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பதற்கான முன்மாதிரி முயற்சியை மேற்கொண்ட மகாசித்தர். அப்படிப்பட்ட ஒரு மகா அவதார புருஷரின் வாழக்கை வரலாற்றை அருமையாக தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பா.சு. ரமணன். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.  

—-

திருவிளையாடற் புராணம், செங்கைப் பதிப்பகம், விலை 300ரூ.

திருவிளையாடற் புராணத்தில் வரும் நிகழ்வுகளை சிறு சிறு வசன நடைக் கதைகளாக்கி வாசகர்களுக்கு அளித்துள்ளார், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எம்.கே. நாதன். மதுரை நான்மாடக்கூடல் என்று அழைக்கப்பட்ட கதை, சிவபெருமான் படை வீரனாக வந்த கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, நரியை பரியாக்கிய கதை, பரியை நரியாக்கிய கதை என இதில் 64 கதைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *