எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்)

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்), நீதியரசர் எஸ். ஜெகதீசன், பாரதி நிலையம், பக். 128, விலை 200ரூ.

இந்த நூல், தமிழகத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளை பப்ற்றி பேசுகிறது. சாலையோரம், நடைமேடை என ஆக்கிரமிப்புகள் பற்றிய முதல் கட்டுரையில் துவங்கி, அரசு நிலங்கள், ஏரிகள், வழக்கறிஞர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள், நீதிமன்ற ஆணைகளை புறக்கணிக்கும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் என, பல்வேறு விதமான பிரச்னைகளும், 12 கட்டுரைகளாக அலசப்பட்டுள்ளன. முதல் 72 பக்கங்கள் கட்டுரைகள், அடுத்த 58 பக்கங்கள், பல்வேறு ஊடகங்களில், ஆக்கிரமிப்பு குறித்து வந்த செய்திகள், படங்கள் இடம் பெற்றுள்ளன. உச்சநீதிமன்றம், 1965ல் வழங்கிய, சாலைகள் பயன்பாடு பற்றிய தீர்ப்பு, நாளுக்கு நாள் கடைப்பிடிக்க முடியாத நிலையில், பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பின் அபாயத்தை உணராத ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்களின் மனநிலை மாறாத வரை நிலைமை இப்படியேதான் தொடரும். -பின்னலூரான். நன்றி: தினமலர்,18/10/15.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *