தடங்கலுக்கு மகிழ்கிறோம்
தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ.
வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.
—-
மனஸ், மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 136, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-4.html
அச்சப்படுவதால் எந்த பலனும் இல்லை. துணிந்து நில்லுங்கள். இந்த உலகை வெல்லலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டும் நூல் மனதைக் கட்டுப்படுத்த போராட வேண்டியதில்லை. புரிந்து கொண்டால் போதும். அது தானாகவே ஒழுங்குக்கு வந்துவிடும் என்கிறார். நமக்கும், நம் மனசுக்கும் இடையே நாம் போடும் சண்டையின் அளவைப் பொறுத்தே நம் வாழ்க்கை, சந்தோஷம், நிம்மதி, வெற்றி, தோல்வி அமைகிறது என்பதை எளிமையாக புரிய வைக்கிறார். கோபம், அலட்சியம், அறியாமை, பயம், கவலை போன்ற பிரச்னைகளிலிருந்து தீர்வுகாண அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்ற படிப்பினையை கற்றுத் தருகிறார். மனதின் உழைப்புக்கு ஏற்ப படிப்பினையை கற்றத் தருகிறார். மனதின் உழைப்புக்கு ஏற்ப அதற்கு ஓய்வு தந்து, ஆனந்தமாய் சந்தோஷமாய் வாழ வழிவகுக்கும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 2/10/2013